Feeds:
Posts
Comments

உஷ்… உஷ் என்ற வெப்ப பெருமூச்சுகளின் ஒலி கேட்கத் துவங்கி விட்டது. இந்தக் கோடையை எப்படி சமாளிப்பது என்பதே, இப்போது எல்லாருக்கும் அனலாய் வீசும் கேள்வி…இதோ, கோடையை ஜில்லிடச் செய்யும் சில டிப்ஸ்…
* கோடைகாலத்தில், அதிகாலை, 5.00 மணிக்கு எழும் பழக்கத்தை மேற்கொள்வது நல்லது. வெயில் வரும் முன், சமையல், வீட்டு வேலைகளை முடித்து விடுங்கள்.
* முதலில், உடலை இறுக்காத பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். அந்த ஆடைகளின் வண்ணங்கள், மென்மை கலந்ததாக இருப்பது நல்லது. கறுப்பு, சிவப்பு மற்றும், “பளிச்’வண்ணங்கள், சூரிய ஒளியை உள் வாங்கும். இதனால், உடலின் நீர்ச்சத்து குறைந்து விடும். நீர் எரிச்சல், நீர்த்தாரை, நீர்க் கடுப்பு போன்ற நோய்கள் ஏற்படும்.
* அதிக நீர் அருந்த வேண்டும். இடைவெளி விட்டு நீர் அருந்தலாம்.
*வெயிலில் அலைந்து வந்தவுடன் நீர் அருந்தக் கூடாது. எவ்வளவு தாகம் இருந்தாலும், பத்து நிமிடம் கழித்து அருந்துவது நல்லது. அந்த நீர், குளிர்சாதனப் பெட்டியில் வைத்து எடுத்த நீராக இருக்கக் கூடாது. இந்த நீர் ஜலதோஷம், தலைவலி, உடல் வலியை ஏற்படுத்தும். மண் பானையில் வைத்த நீரை அருந்துவது நல்லது.
* குடிநீரில், சீரகம் கலந்து கொதிக்க வைத்து, ஆறியபின், அருந்தலாம்.
* கோடையின் வெப்பத்தை குறைக்க, மோரே அருமருந்தாகும். மதிய வேளையில், மோரில் நீர் கலந்து, அதனுடன் சீரகம், கொத்தமல்லி சேர்த்து குடிக்கலாம்.
* கோடை காலத்தில், டிபன் அதாவது தோசை, பூரி, பரோட்டா இவற்றை தவிர்ப்பது நல்லது. காலையில் இட்லியும், கேழ்வரகு, கம்பு இவற்றை கஞ்சியாக செய்தும் சாப்பிடலாம். இதனால்,உண்ட உணவு எளிதில் ஜீரணமாகும்.
* மதிய உணவில் அதிகக் காரம், புளி சேர்க்காமல், நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்.
* பறங்கிக்காய், பூசணிக்காய், சுரைக்காய், வெள்ளரிக்காய் அதிகம் சேர்த்துக் கொள்ளவும்.
* தினமும் இருமுறை குளிப்பது நல்லது. அதிக வியர்வை இருக்கும் போதும், வெயிலில் இருந்து திரும்பிய உடனும் குளிக்கக் கூடாது.
* மதிய வெயிலில் அலைவதை தவிர்க்கவும். முடிந்தவரை, பகலில் நீண்ட தூரப் பயணத்தைத் தவிர்ப்பது நல்லது.
* வெயில் தாக்காமலிருக்க, தலையில் தொப்பி அணிந்து செல்லலாம். வெளியில் செல்லும் போது, முகம், கை, கால்களில் லேசாக எண்ணெய் தேய்த்து கொண்டால், சருமம் வறட்சியடையாமல் இருக்கும்.
* வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம்.
* கோடை வெப்பத்தில், அதிக நேரம் குளிரூட்டப் பட்ட,”ஏசி’ அறையில் இருப்பது நல்லதல்ல. அதுபோல், அலைந்து திரிந்து வியர்வையுடன் குளிரூட்டப்பட்ட அறைக்குள் செல்வதும் நல்லதல்ல.
* சர்க்கரை நோயாளிகள், கோடை காலத்தில், அதிகம் வெயிலில் அலைவதைத் தவிர்க்க வேண்டும். உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
* படுக்கையறை நன்கு காற்றோட்டமாக இருக்க வேண்டும். பருத்தியினால் தயாரிக்கப்பட்ட விரிப்புகளை பயன்படுத்தலாம்.
* வெளியே செல்லும் போது, கறுப்பு வண்ண குடைகளை பயன்படுத்துவது நல்லது.

சோம்புவை எடுத்து சுத்தம் செய்து தண்ணீர் விட்டு காய்ச்சி அந்த நீரை அடிக்கடி குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

கேரட்டை நன்றாக துருவி போட்டு அதில் தேன் சேர்த்து நன்கு கலந்து சாப்பிட்டு வந்தால் உடலில் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் பருமன் குறையும்.

நெல்லிக்காயை எடுத்து சுத்தம் செய்து கொட்டையை நீக்கி விட்டு நன்கு அரைத்து பிழிந்து சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் பருமன் குறையும்.

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் இவைகளை எடுத்து நன்றாக பொடியாக்கி வெந்நீரில் கலந்து காலையில் குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

நான்கு அவுன்சு வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பருகி வந்தால் உடல் பருமன் குறையும்.

ஆமணக்கின் வேரை நன்றாக இடித்துத் தேன் கலந்து நீரில் இரவு ஊற வைத்து காலையில் கசக்கிப் பிழிந்து,நீரை வடிகட்டி குடித்தால் உடல் பருமன் குறையும்.

வெள்ளரி, நெல்லி, கோஸ், கொத்தமல்லி, முருங்கை, திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, பப்பாளி, அன்னாசி, எலுமிச்சை, கொய்யா, புதினா, வெங்காயம், தர்பூசணி, பேரிக்காய், கறிவேப்பிலை, வாழைத்தண்டு இவைகளை சாறு எடுத்து குடிக்க உடல் எடை குறையும்.

அருகம்புல் சாறெடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர தொப்பை குறையும்.

கரிசலாங்கண்ணி இலையை, பாசி பருப்புடன் சேர்த்து சமைத்து தினமும் சாப்பிட உடல் எடை குறையும்.

பாதாம் பவுடரை எடுத்து சிறிது தேன் கலந்து காலையில் சாப்பாட்டிற்கு பிறகு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

டெங்குகொசுவைஒழிக்கஒருஎளியவழி…

டெங்குகாய்ச்சலுக்குமூலகாரணமாகஇருக்கும்கொசுக்களைஒழிக்கநாமும்பலவழிகளில்போராடித்தோற்றும்விட்டோம். இதோஒருஎளியஅதிகசெலவில்லாதஒருவழி! முயற்சிசெய்துதான்பாருங்களேன்.

ஒரு 2 லிட்பெப்ஸிஅல்லதுகோகோகோலாபாட்டிலைஎடுத்து, அதைசரிபாதியாகவெட்டிவைத்துக்கொள்ளுங்கள்.

கீழ்பாகபாட்டிலில்அரைப்பாகம்வெதுவெதுப்பானசுடுநீரைஊற்றவும்.

அதில் 3/4 கப்பிரவுன்சுகர்எனும்பழுப்புநிறகரும்புசக்கரையையும், ஒருடேபிள்ஸ்பூண் YEAST ம்மிக்ஸ்பண்ணிநன்றாககரைக்கவும்.

(சீனிஎனும்சாதாசர்க்கரையையும்பயன்படுத்தலாம்)

வெட்டிஎடுத்தபாட்டிலின்மேல்பகுதியைதலைகீழாககவிழ்த்துபுனல்போல்கரைசல்உள்ளபாட்டிலைமூடவும். இந்தபாட்டிலின்சுற்றுசுவரைகறுப்புநிறகாகிதத்தைசுற்றிஒட்டவும்.

இந்தகரைசல்உல்ளபாட்டிலைஉங்கள்ரூமின்ஒருமூலையில்வைத்துவிடுங்கள். அவ்வளவுதான்நம்வேலை.

இந்தகரைசலில்இருந்துகார்பண்டைஆக்ஸைடுஎனும்வாயுவெளிவந்துகொண்டிருக்கும். இதனால்கொசுக்கள்கவரப்பட்டுஇந்தபாட்டிலைநோக்கிபடையெடுத்துவந்துபாட்டிலில்ன்உள்ளேசெல்லும். அப்போதுஅங்குள்ளஇனிப்புகரைசலில்ஒட்டிகொண்டுவெளிவரமுடியாமல்அங்கேயேசமாதியடையும்.(அடையனும்..ஹூம்….நமக்குஇவ்வளவுஅறிவுஇருப்பதைதெரிந்துஇதிலிருந்தும்தப்பிக்கஒருவேளைபாழாய்ப்போனகொசுக்கள்புதியயுக்திஎதையாவதுகடைப்பிடிக்கஆரம்பித்தால்அதற்குநான்பொறுப்பல்ல. அவ்வளவுதான்இப்போதேசொல்லிப்புட்டேன்.)

நம்மைகொசுக்கள்கடிப்பதற்குநம்மேலுள்ளகோபமோ, அன்போகாரணமல்ல. நாம்வெளிவிடும்கார்பண்டைஆக்ஸைடுஎனும்வாயுவால்கவரப்பட்டுதான்அவைகள்நம்மைநோக்கிவருகின்றன. இப்போதுஅந்தவேலையைகரைசல்உள்ளபாட்டில்கவனித்துக்கொள்ளும்.

இதன்பலனை 4×5 நாட்களில்தெரிந்துகொள்ளலாம்.

3 வாரங்களுக்குஒருமுறைகரைசலைமாற்றிவிடவேண்டும்.

எப்படியோஇந்தவழியிலாவதுகொசுக்கள்ஒழிந்தால்சரிதான். இந்தஎமன்களிடமிருந்துநம்மைகாப்பாற்றஇறைவன்ஒருவனால்மட்டுமேமுடியும்எனஇறையைவேண்டும்உங்கள்,

Engr.Sulthan.

டெங்குகாய்ச்சலில்இருந்துதப்பிப்பதுஎப்படி? சுகாதாரத்துறைஅதிகாரிவிளக்கம்

‘ஏடிஸ்’ தென்மாவட்டமக்களைஅதிரவைத்தஅதிபயங்கரகொசு! தற்போதுதிருப்பூர், கோவையிலும்தனதுகைவரிசையைநீட்டியிருக்கிறது. குழந்தைகள்முதல்பெரியவர்கள்வரைபெரும்பாலானோரைபாரபட்சமில்லாமல்கடித்துடெங்குகாய்ச்சலால்படுக்கவைத்திருக்கும்பயங்கர ‘வியாதி’க்கானகாரணகர்த்தாதான்இந்தஏடிஸ்கொசு!

ஏடிஸ்கொசுஎப்படிபிறக்கிறது? இதுகடித்தால்என்னவாகும்? டெங்குஏற்படுவதற்கானஅறிகுறிஎன்ன? வராமல்தடுப்பதுஎப்படி? வந்தால்தடுப்பதுஎப்படி? என்பதுகுறித்துகோவைமாவட்டசுகாதாரத்துறைஇணைஇயக்குனர்செந்தில்குமார் ‘மாலைமலர்’ நிருபரிடம்கூறியதாவது:-

வழக்கமாககொசுக்கள்தேங்கிகிடக்கும்கழிவுநீரில்இருந்துஉற்பத்திஆகும். ஆனால்ஏடிஸ்கொசுதேங்கிகிடக்கும்நல்லதண்ணீரில்இருந்துஉற்பத்தியாகும்ஒருபூச்சிவகையைசேர்ந்தது. தேங்காய்சிரட்டைகள், தெருவில்வீசப்பட்டபிளாஸ்டிக்கப்கள், பழையபாத்திரங்கள், ஆட்டுஉரல்கள்போன்றவற்றில்தேங்கிஇருக்கும்மழைநீர்மூலம்இந்தகொசுக்கள்உற்பத்திஆகிறது. இவைபெரும்பாலும்வீட்டிற்குள்ளும்வீட்டைசுற்றியும்அதிகமாகவலம்வரும்.

இந்தவகைகொசுக்கள்நோய்எதிர்ப்புசக்திகுறைந்தநபர்களையோ, குழந்தைகளையோகடித்தால்உடனடியாகஅவர்களைடெங்குகாய்ச்சல்தாக்கும்அபாயம்உள்ளது. பெரும்பாலும்இந்தகொசுக்கள்குழந்தைகளைகடிக்கும்போதுஎளிதில்நோய்தாக்குதலுக்குஆளாவர்.

ஒருவரைஏடிஸ்கொசுகடித்தால்முதலில்காய்ச்சல்வரும். உடல்வலியுடன்எலும்புகளிலும்வலிஏற்படும். இப்படிஏதாவதுஉடல்வலிகள்தொடங்கும்பட்சத்தில்அதுடெங்குகாய்ச்சலுக்கானஅறிகுறிஎன்றுஅர்த்தம். உடனடியாகஅரசுஆஸ்பத்திரிக்குசென்றுஉரியசிகிச்சைமேற்கொண்டுடெங்குகாய்ச்சலில்இருந்துவிடுபடலாம்.

இந்தநோய்எளிதில்குணப்படுத்தகூடியநோய். அதேநேரத்தில்போதியசிகிச்சைஎடுத்துக்கொள்ளாமல்காய்ச்சல்தொடர்ந்துநீடித்தால்உயிரிழக்கும்அபாயமும்உள்ளதுஎன்பதைமக்கள்புரிந்துகொள்ளவேண்டும். இந்தநோய்முற்றியநிலையில்இதேகிருமிகள்ரத்தத்தில்உள்ளபிளட்லெட்களைசாப்பிடும். இதனால்மனிதஉடலில்உள்ளரத்தம்உரையும். வாய், மூக்குஎனஉடலின்பல்வேறுபகுதிகளில்ரத்தகசிவுஏற்படும். இதனால்விலைமதிக்கமுடியாதஉயிர்இழப்பும்ஏற்படும்.

அதனால்இந்தநோய்க்கானஅறிகுறிதென்பட்டவுடன்உரியசிகிச்சைமேற்கொண்டுஉடல்நலத்தைகாத்துக்கொள்ளலாம்.

அதேநேரத்தில்சுற்றுப்புறத்தைமழைநீர்தேங்காமல்சுத்தமாகவைத்துக்கொள்ளுதல்மூலமாகவும்வீட்டிற்குள்கொசுவராமல்தடுப்பாகஜன்னலில்கொசுவலைகளைபயன்படுத்துவது, கொசுஒழிப்பான்கள்பயன்படுத்துவதன்மூலமும்டெங்குகாய்ச்சலைஏற்படுத்தும்ஏடிஸ்கொசுவைவிரட்டிநோய்வராமல்தடுக்கலாம்.

கோவை, திருப்பூரில்தென்மாவட்டங்களைபோலடெங்குகாய்ச்சல்பாதிப்புஇல்லை. கடந்தஆண்டைஒப்பிடும்போதுகூடஇங்குகுறைவுதான். இருந்தாலும்மக்கள்நலனில்அக்கறைகொண்டசுகாதாரத்துறைபோத்தனூர்உள்படமாவட்டம்முழுவதும்தீவிரகொசுஒழிப்புநடவடிக்கையைமேற்கொண்டுஉள்ளது. மாநகரபகுதியிலும்மாநகராட்சிசுகாதாரத்துறைகொசுஒழிப்புபணிகளைதீவிரப்படுத்திஉள்ளது. புகைமூலம்கொசுக்கள்அழிக்கப்பட்டுவருகிறது.

பொதுமக்கள்பயப்படதேவையில்லை. மாவட்டகலெக்டரின்ஆலோசனையின்பேரில்சுகாதாரத்துறைஅதிகாரிகளும்முழுவீச்சில்முன்னெச்சரிக்கைநடவடிக்கைமேற்கொண்டுள்ளனர்.

பொதுமக்கள்சகாதாரமாக, விழிப்புணர்வோடுஇருந்தால்டெங்குகொசுவைஒழித்துகாய்ச்சல்வராமல்தற்காத்துகொள்ளலாம்.

சிலபேர் முக்கியமான ஒன்றை இன்டெர்நெட்டில் browsing செய்யும் போது மிகவும் மெதுவாக page loading ஆகும் . இதைக்கண்டாலே கடுப்பாகவரும் . internet browsing speed ஐ எந்த சாஃப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிப்பது எப்படி என்று இந்த பதிவில் பார்போம்.

இனி உங்கள் Internet browsing வேகம் முயல் இல்லை நெருப்புக்கோழிதான் …

Internet browsing speed ஐ அதிகரிக்கும் முறை :

1.நீங்கள் xp வைத்திருந்தாள் :

XP –>கிளிக் programs–> Run செல்லவும்.
Run box இல் கீழே உள்ளதை டைப் செய்யவும் .
gpedit.msc

2.நீங்கள் 7 வைத்திருந்தாள் :

windows 7 னில் programs—> search box—> Type “Run”
Run box இல் கீழே உள்ளதை டைப் செய்யவும் .

gpedit.msc

3.இப்போது வரும் புதிய விண்டோக்களில் பின்வருவதை கிளிக் செய்யவும்.

Computer Configuration
Administrative Templates
Network
QoS Packet Scheduler
Limit Reservable Bandwidth

4. இதில் Not Configured என்பது கிளிக் செய்யப்பட்டு இருக்கும் இதனை Enable என மாற்றி பின்னர் படத்தில் உள்ளது போல கீழே உள்ள 20 ஐ 0 ஆக்கவும்.

பிறகு apply செய்து OK கொடுக்கவும்.

முக்கிய குறிப்பு :

இந்தமுறை 20% வேகத்தை மட்டுமே கூட்டும்.
மிக அதிகமான வேகத்தை எதிர்பார்க்க உங்களிடம் அதற்கேற்ப இணைய இணைப்பு இருக்க வேண்டும்.
அதுமட்டுமல்லாமல் உங்களுடைய Internet Browser Update செய்திருக்க வேண்டும்.

இப்படி செய்தால் உங்களுடைய Internet browsing speed அதிகரிக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

Pootri – 108

ஆன்மீகம் >> 108 போற்றிகள்!
ஆனைமுகத்தோன், அண்ணாமலையான், ஆறுமுகன்போற்றிகள்!

ஆனை முகத்தவன் தாள் பணிந்தேன்!
படியம்பட்டு தஞ்சியம்மன் தாள் பணிந்தேன்!

1. ஓம் ஆனைமுகத்து ஐங்கரன் தாள் போற்றி ஓம்!
2. ஓம் திருவண்ணாமலையானே போற்றி ஓம்!
3. ஓம் ஆதிநாராயணனே போற்றி ஓம்!
4. ஓம் வேங்கிடமலையானே போற்றி ஓம்!
5. ஓம் ஐயப்ப சுவாமியே போற்றி ஓம்!
6. ஓம் ஆனந்தவிநாயகனே போற்றி ஓம்!
7. ஓம் ஞானகந்தர விநாயகனே போற்றி ஓம்!
8. ஓம் பெரும்பூத விநாயகனே போற்றி ஓம்!
9. ஓம் பொள்ளாப் பிள்ளையார் விநாயகனே போற்றி ஓம்!
10. ஓம் செந்தில் விநாயகனே போற்றி ஓம்!
11. ஓம் அரசரடி கற்பக விநாயகனே போற்றி ஓம்!
12. ஓம் பாவாடை மூர்த்தி விநாயகனே போற்றி ஓம்!
13. ஓம் மூர்த்தி விநாயகனே போற்றி ஓம்!
14. ஓம் சக்தி விநாயகனே போற்றி ஓம்!
15. ஓம் கற்பக விநாயகனே போற்றி ஓம்!
16. ஓம் மாயசக்தி விநாயகனே போற்றி ஓம்!
17. ஓம் மாப்பிள்ளை விநாயகனே போற்றி ஓம்!
18. ஓம் பாலவிநாயகனே போற்றி ஓம்!
19. ஓம் நர்த்தன விநாயகனேபோற்றி ஓம்!
20. ஓம் சந்தான விநாயகனே போற்றி ஓம்!
21. ஓம் சித்தி புத்தி விநாயகனே போற்றி ஓம்!
22. ஓம் வரசக்தி விநாயகனே போற்றி ஓம்!
23. ஓம் வலம்பு¡¢ விநாயகனே போற்றி ஓம்!
24. ஓம் முக்குருனி விநாயகனே போற்றி ஓம்!
25. ஓம் ஏலேலசிங்க விநாயகனே போற்றி ஓம்!
26. ஓம் சங்குபாணி விநாயகனே போற்றி ஓம்!
27. ஓம் கொக்களத்தி விநாயகனே போற்றி ஓம்!
28. ஓம் செளபாக்ய விநாயகனே போற்றி ஓம்!
29. ஓம் வெற்றி விநாயகனே போற்றி ஓம்!
30. ஓம் செல்வ விநாயகனே போற்றி ஓம்!
31. ஓம் துந்துபி விநாயகனே போற்றி ஓம்!
32. ஓம் இடுக்குப் பிள்ளையார் விநாயகனே போற்றி ஓம்!
33. ஓம் சர்வசித்தி விநாயகனே போற்றி ஓம்!
34. ஓம் மங்கள விநாயகனே போற்றி ஓம்!
35. ஓம் இரட்டை பிள்ளையார் விநாயகனே போற்றி ஓம்!
36. ஓம் தில்லை விநாயகனே போற்றி ஓம்!
37. ஓம் ஆதி விநாயகனே போற்றி ஓம்!
38. ஓம் விளக்கொளி விநாயகனே போற்றி ஓம்!
39. ஓம் ஞானச்சுடர் விநாயகனே போற்றி ஓம்!
40. ஓம் செல்லப் பிள்ளையார் விநாயகனே போற்றி ஓம்!
41. ஓம் முப்பெருந்தேவியரே போற்றி ஓம்!
42. ஓம் படியம்பட்டு தஞ்சியம்மனே போற்றி ஓம்!
43. ஓம் ஊத்துக்காடு எல்லையம்மனே போற்றி ஓம்!
44. ஓம் காஞ்சி காமாட்சியே போற்றி ஓம்!
45. ஓம் காசி விசாலட்சியே போற்றி ஓம்!
46. ஓம் மதுரை மீனாட்சியே போற்றி ஓம்!
47. ஓம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியே போற்றி ஓம்!
48. ஓம் மோரணம் பொன்னியம்மையே போற்றி ஓம்!
49. ஓம் முக்கூர் பாஞ்சாலியம்மனே போற்றி ஓம்!
50. ஓம் தண்டரை பச்சையம்மனே போற்றி ஓம்!
51. ஓம் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வா¢யே போற்றி ஓம்!
52. ஓம் படவேடு இரேணுகா தேவியே போற்றி ஓம்!
53. ஓம் வாழப்பந்தல்வாழ் பச்சியம்மனே போற்றி ஓம்!
54. ஓம் நமசிவாயனே போற்றி ஓம்!
55. ஓம் செய்யாறுறையும் வேதபு¡£ஸ்வரனே போற்றி ஓம்!
56. ஓம் காளத்தி அப்பனே போற்றி ஓம்!
57. ஓம் உமையொரு பாகனே போற்றி ஓம்!
58. ஓம் காஞ்சி ஏகாம்பரநாதனே போற்றி ஓம்!
59. ஓம் திருப்பெருந்துறை உறைசிவனே போற்றி ஓம்!
60. ஓம் தில்லை நடராசனே போற்றி ஓம்!
61. ஓம் மறையவனும் மாலும் காணா மாமகனே போற்றி ஓம்!
62. ஓம் நால்வர் போற்றிய நற்பொருளே போற்றி ஓம்!
63. ஓம் மாணிக்கவாசகனின் மாணிக்க மணியே போற்றி ஓம்!
64. ஓம் முக்கண்ணுடைய முதல்வனே போற்றி ஓம்!
65. ஓம் கயிலைமலையானே போற்றி ஓம்!
66. ஓம் கனல்மலையானே போற்றி ஓம்!
67. ஓம் தி¡¢புரம் எ¡¢த்த சிவனே போற்றி ஓம்!
68. ஓம் மலைமகள் மார்பனே போற்றி ஓம்!
69. ஓம் கடலைப் பொடியுடைய பெம்மானே போற்றி ஓம்!
70. ஓம் வேலூர் ஜலகண்டேஸ்வரனே போற்றி ஓம்!
71. ஓம் பிறைசூடிய பெருமானே போற்றி ஓம்!
72. ஓம் செய்யாறுறையும் பட்சீசுவரனே போற்றி ஓம்!
73. ஓம் சொக்க நாதப் பெருமானே போற்றி ஓம்!
74. ஓம் அங்கயற்கண்ணிக்கருளிய ஆலவாய் அழகனே
போற்றி ஓம்!
75. ஓம் திருத்தணி திருமுருகனே போற்றி ஓம்!
76. ஓம் இரத்தினகி¡¢வாழ் பால முருகனே போற்றி ஓம்!
77. ஓம் பழனி மலைவாழ் தண்டபானியே போற்றி ஓம்!
78. ஓம் திருச்செந்தூர் வாழ்வேலவனே போற்றி ஓம்!
79. ஓம் பழமுதிர்ச்சோலை பரமனே போற்றி ஓம்!
80. ஓம் ஆவினன் குடிவாழ் அன்பனே போற்றி ஓம்!
81. ஓம் முருகார் முருகனே போற்றி ஓம்!
82. ஓம் அழகார் ஆறுமுகனே போற்றி ஓம்!
83. ஓம் சூரனை சூரையாடிய கந்தரனே போற்றி ஓம்!
84. ஓம் அப்பனுக்குப்பாடம் சொன்னசுப்பனே போற்றி ஓம்!
85. ஓம் வள்ளிக்கு வாழ்வளித்த வள்ளலே போற்றி ஓம்!
86. ஓம் தெய்வயானை தலைவா போற்றி ஓம்!
87. ஓம் சக்தியிடம் சக்திவேல்வாங்கியோய் போற்றி ஓம்!
88. ஓம் வடிவேல் முருகனே போற்றி ஓம்!
89. ஓம் வெற்றிவேல் முருகனே போற்றி ஓம்!
90. ஓம் திருப்பரங் குன்றம் வாழ் குகனே போற்றி ஓம்!
91. ஓம் சுவாமிமலைவாழ் சுவாமி நாதனே போற்றி ஓம்!
92. ஓம் மருதமலை வாழ் மாசறுமணியே போற்றி ஓம்!
93. ஓம் மயிலம் வாழ் முருகனே போற்றி ஓம்!
94. ஓம் குமரகோட்டத் துறையும் குகனே போற்றி ஓம்!
95. ஓம் விறைமலர்ச் சூடிய விசாகனே போற்றி ஓம்!
96. ஓம் வல்லக்கோட்டை வாழ் வள்ளலே போற்றி ஓம்!
97. ஓம் கார்த்திகை கன்னியர் போற்றிட்ட கார்த்திகேயனே
போற்றி ஓம்!
98. ஓம் கதிர்வேலா போற்றி ஓம்!
99. ஓம் கடம்பநாதனே போற்றி ஓம்!
100. ஓம் கந்த பெருமானே போற்றி ஓம்!
101. ஓம் குன்று தோராடும் குமரனே போற்றி ஓம்!
102. ஓம் செவியீராறுடைச் செம்மால் போற்றி ஓம்!
103. ஓம் அருணகி¡¢க்கு அருள் அமல போற்றி ஓம்!
104. ஓம் நக்கீரற்கருள் நாதா போற்றி ஓம்!
105. ஓம் சங்கத் தமிழ் சாற்றிய சண்முக போற்றி ஓம்!
106. ஓம் குமரகுரபரற் கருளினை போற்றி ஓம்!
107. ஓம் சேவற்கொடியுடையோனே போற்றி ஓம்!
108. ஓம் வாயுமகன் ஆஞ்சநேயனே போற்றி ஓம்!
ஓம் பல்வகை வளனும் பணித்தருள் போற்றி ஓம்!

After death….

மரணத்திற்கு பிறகு ???

"மரணம்" – எல்லா உயிர்களும் அடைய விரும்பாவிடிலும் பெற்றே ஆக வேண்டிய முடிவு.

உண்மையில் மரணத்தின் பின் என்னதான் ஆகிறோம்? இந்த கேள்விக்கு கண்டிப்பாக "அறிவியல்" இடமிருந்து பதிலை எதிர்பார்ப்பது இயாலாத ஒன்று என்று நினைத்த நான், சில ஆன்மிக புத்தகங்களை உதவிக்கு நாடினேன். பல்சுவையான பதில்கள் எனக்கு கிடைக்க ஆரம்பித்தன.

கிறித்துவ மதம் இதற்கு சொர்க்கம் (Heaven), நரகம் (Hell) என்ற இரு பிரிவுகளை கை காட்டியது. பாவம் (Sin) செய்தவர்கள் நரகம் சென்று பாவத்திற்கு ஏற்ற தண்டனைகளை பெறுவதாகவும், சொர்க்கம், புண்ணியங்களின் பலன்களை ஏற்கும் இடமாகவும் காட்ட பட்டது. இறைவனின் அருள் பெற்றவர்கள் அழிவில்லா தன்மை (Immortality) அடைவதாகவும் (சில குறுப்பிட்ட பிரிவினர் மட்டும் இதை நம்புகின்றனர்) உள்ளது. சொர்கமும், நரகமும் மறு பிறப்புக்கு முதற்பட்ட நிலைகளென குறுப்பிட படுகிறது.

இஸ்லாமிய மதமும் கிட்டத்தட்ட ஒருமித்த கருத்துகளையே சொல்வதாக கருதுகிறேன். இங்கே சொர்க்கம், "ஜன்னா" (Jannah) என்றும், நரகம் "ஜஹனம்" (Jahannam) என்றும் பெயரிட பட்டுருக்கிறது."மாலிக்" என்ற நபர், நரகத்தை (Jannah) பாதுகாப்பதாக குர்ர்-ஆன் கூறுகிறது. இங்கு எரிந்து கொண்டு இருக்கும் நரகமும், மிக கடுமையான குளிருடன் கூடிய நரகமும் என, 2 விதமான நரகங்கள் கூறபடுகிறது. மிகவும் மோசமானவர்கள் குளிர் நரகத்துக்கு செல்வதாக நம்ப படுகிறது (ஜில்லுனு ஒரு நரகம்???).

அடுத்து, இந்து மதத்தை அலச முயன்றேன். இதற்கு "கருட புராணம்" உதவியாக இருக்கும் என முதலில் அந்நூலை படிக்க தொடங்கினேன். இந்நூல், கருட பகவானின் கேள்விகளுக்கு, மஹா விஷ்ணுவே நேரடியாக பதிலை அளிப்பதாக, வியாச மாமுனி அவர்களின் சீடர்களுக்கு உரைத்த புராணம் என அறிந்தேன். "அந்நியன்" படத்திற்கு பிறகு, கருட புராணத்தை பற்றி தெரியாதவர்களும், தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை கண்டிப்பாக பெற்றிருக்க கூடும், என்னை போல். இந்த புராணம், எவை பாவங்கள் என்றும் அதற்கு ஏற்ற தண்டனைகளையும் விளக்குவதாக உள்ளது. மேலும், எமதர்மன், சித்திர குப்தன், விசித்திர குப்தன், எம தூதர்கள், தேவ தூதர்கள் போன்ற சில கதாபாத்திரங்களையும் நமக்கு அறிமுக படுத்துகிறது. மேலும் எமன், சித்திர குப்தன், விசித்திர குப்தன் போன்ற ஒவ்வொருவரையும் மகிழ்ச்சி படுத்தும் வேள்விகள், தானங்கள் போன்றவற்றையும் நமக்கு எடுத்துரைக்கிறது. மேலும் துர் மரணம் அடைந்த உயிர்கள், நரகத்தேயே அடையும் என்றும், புண்ணியம் செய்தவர்கள் தேவ தூதர்களால் அழைத்து செல்ல படுவார்கள் என்றும், பாவம் செய்தவர்கள் எம தூதர்களால் அடித்து இழுத்து செல்ல படுவதாகவும் படித்தேன். நரகத்தில் கொடுக்க படுவதாக சொல்லப்படும் தண்டனைகள், கண்டிப்பாக யாரையும் பயமுறுத்தி விட கூடியவைகளாக உள்ளன. உதாரணமாக, பாவம் செய்தவர்கள் கிட்ட தட்ட ஒரு வருடம் வரையிலும் எம லோகத்திற்கு இழுத்து செல்ல படுவதாகவும், "பிண்டம்" என அந்த உயிருக்கு படைக்க படும் உணவை உண்டு அதன் மூலம் சிறுது சிறிதாக உடலை அடைந்து பின் எம லோகத்தை அடைவதாகவும், அதன் பின் அந்த கட்டுண்ட உடலுக்கே தண்டனைகள் கொடுப்பதாகவும் படித்தேன். இழுத்து செல்லும் வழி எங்கும், சில நரகங்களுக்கு உள்ளே அனுமதித்து அங்கே அவர்கள் சாப்பிட நேரம் ஒதுக்க படுவதாகவும், எம லோகத்தின் நுழைவு இடத்தில மிகவும் கொடிய துர்-நாற்றமுடைய ஆறு ஒன்றை கடக்க சொல்வாதகவும் படித்தேன். அதன் பின்னரே அவர்களின் உண்மையான தண்டனைகள் அவனுக்கு வழங்க படுகிறது. இவ்வாறு கற்பனைக்கு எட்டாத பல விஷயங்கள் என்னை ஆச்சர்யத்துக்கு உண்டாக்கியது, சொல்ல போனால் அதிர்ச்சிக்கு உண்டாக்கியது. இவை கற்பனைகளே என கொண்டாலும், இத்தனை கற்பனைகளுக்கு தலை வணங்கியே ஆக வேண்டும்.

புத்த மதமும், "எமன்" எனும் அரசனை கொண்டு மொத்தம் 10 அரசர்களால் "நரகம்" ஆள படுவதாக கூறுகிறது. மேலும் தேவர்கள், அசுரர்கள் போன்ற கருத்துகளும் இதில் உண்டு. எனவே புத்த மதமும் இந்து மதத்தின் சாரத்தேயே கூறுவதாக எடுத்து கொள்ளலாம்.

விவேகானந்தர், மரணத்தினை வித்தியாசமாக அலச முயன்றிருப்பதாக, அவரின் "மரணுத்துக்கு பின்னால்" என்ற புத்தகம் மூலம் உணர்ந்தேன். அவர் உடலையே மையாமாக கொண்ட மதங்களையும் (எகிப்து பகுதிகளில் இன்றளவும் உடல் உள்ளவரை மட்டுமே உயிர் இருக்கும் என்ற கருத்தினை மையமாக கொண்டு "Mummy" எனும் உடலை பாதுகாக்கும் முறையில் நம்பிக்கை கொண்டவர்கள் உள்ளனர்), உயிரையே (ஆத்மாவை) மையமாக கொண்ட மதங்களையும் அவர் ஆராய்கிறார். அவர் உடலை மையமாக கொண்ட மதங்கள் கூறும் விசயங்களில் உடன்பாடு இல்லாத நிலையை வெளிபடுத்தியும், மோட்சம் (முக்தி) என்ற ஒரு நிலைக்கே எல்லா உயிர்களும் பாடு படுகின்றன என்றும் அதில் விளக்கி உள்ளார். மேலும் கடவுளை அடையும், அதாவது கடவுளுடன் ஒன்றிணைதல் என்ற நிலை யோகங்களின் மூலம் பெறலாம் என்றும் கூறுகிறார். இதற்கு எல்லாம் அடித்தளமான "பகவத் கீதை" யை அறிய அதற்குள் நுழைய ஆரம்பித்தேன்.

அங்கு ஆத்மாவுக்கு அழிவே இல்லை. அது என்று முக்தி நிலையை அடைகிறதோ அப்போது தான், மறு பிறவியில் இருந்து விடுதலை அடைகிறது. அதுவே ஒவ்வொரு உயிரின் இறுதி கட்ட குறிக்கோள் என்றும், மனித பிறவியே எல்லா பிறவியை விடவும் உயர்ந்தது எனவும் அறிவுரை படுத்தபட்டேன். முக்தி நிலை, இறைவனில் இரண்டற கலக்கும் நிலை எனும் கருத்தை சுமார் 5000 வருடங்களுக்கு முன்னரே பகவான் கிருஷ்ணர் கூறியிருப்பதையும், இங்கே கூறப்பட்ட விஷயங்கள் தான் மெருகேற்ற பட்டு பிற மதங்களில் (மற்ற மகா புருஷர்களால்) கூற பட்டிருக்கலாம் என எண்ண தோன்றியது. சுவாமி விவேகானந்தர் மற்றும் ராம கிருஷ்ண பரமஹம்சர் கூட இதே கருத்துகளையே செப்பனிடுவதாக தோன்றியது. எல்லோருக்கும் இறைவன் ஒருவனே அடைய தகுந்த உயர் நிலை என்பதே எல்லா மதத்தின் கருத்தாக எனக்கு தோன்றியது. அதை கிருஷ்ணர் "நானே அதை அடைய ஒரே வழி" என்றும் கிறிஸ்துவும் "நானே உன் பாவங்களை போக்கி முழு நிலை அளிப்பேன்" என்றும், புத்தர், மகாவீரர், நபிகள் நாயகம் என எல்லோரும் இதையே (அடிப்படை) கூறுவதாக தோன்றியது.

இவ்வாறு சில ஆராய்ச்சிகளுக்கு பிறகு, பிறப்பும் இறப்பும் எதை அடிப்படையாக கொண்டு இருக்கலாம் என கருத்துகளை மையமிட முயன்றேன். இதில் மையமாக கீழ் தந்த கருத்துகளை பார்க்கிறேன்.

"ஆத்மா"என்றும் மாசு படாத, அதாவது கரை படாத மற்றும் ஆக்கமும் அழிவும் இல்லாத நிலை. செய்த பாவங்கள், புண்ணியங்களை பொருத்து "ஆத்மா" அதன் அடுத்த உடலை தேர்ந்து எடுக்கிறது. அல்லது பிறவி எனும் பாவத்தில் இருந்து விடுபடுகிறது."ஆசை"யே அழிவுக்கு காரணம். ஆசையை கட்டுப்படுத்தியவன் எதற்கும் அடிமை அல்ல. அவன்
விரைவிலேயே பிறவி கடலின், கரையை காண்கிறான்.

இந்த குறுகிய கால ஆராய்ச்சிகள், இந்த தேடலில் கண்டிப்பாக முழு பதிலை தராது என உணர்ந்தேன். என் பார்வையில் மரணம் கூட ஒரு முடிவு அல்ல என்பது போன்ற எண்ணம் சற்றே தோன்றலாயிற்று. தற்கொலை செய்து கொள்பவர்கள், கண்டிப்பாக ஒரு இழிவான நிலையை மரணத்துக்கு அடுத்து பெறுவார்கள் என கிட்டத்தட்ட எல்லா மதமும் சொல்கின்றன. மரணம் எப்படி ஒரு பிரிவை, உறவினர்களுக்கு தருகிறதோ, அதே போன்று உடலை பிரிந்த ஆத்மாவும், பிரிவினையை உணருமா? இதற்கு இந்து மதத்தின் புனித நூலான "பகவத் கீதை", ஆத்மா எந்த பந்தங்களிலும் சிக்காது, ஆனால் பந்தங்களே இல்லாத வாழ்க்கை வாழும் வரை, விடுதலை அடைவதில்லை, என்பது போன்ற கருத்துகளை கொடுக்கிறது. உடல் ஒரு சட்டை க்கு ஒப்பிடப்படுகிறது. உயிர் மறு பிறவியின் மூலம் மற்றொரு சட்டையை மாட்டி கொள்கிறது. சட்டை கிழிந்ததை உடலுக்கு ஏற்பட்ட இழப்பு என்று கூற முடியாது. அது போல் உடல் பிரிந்ததை உயிரின் இழப்பு என்று கூற முடியாது என்பது தான் மைய கருத்து.

இது போன்ற ஆன்ம ரீதியான படிப்புகள், மனிதனை கண்டிப்பாக தவறுகள் செய்யும் போது எச்சரிக்கும் அற்புதமான நண்பர்கள். வாழ்க்கை, இறந்ததும் முடிந்து விடுகின்றது, எனவே இருக்கும் வரை "தவறுகள்" செய்தாவது அனுபவிக்க வேண்டும் என்று நினைக்கும் படியான நிலை, என்னை சற்று உறுத்தவே செய்தது.

எல்லா உயிர்களுமே ஒரே மாதிரியான ஆத்மாக்களை கொண்டதானால், "வைரஸ்" போன்ற நுண்ணுயிரிகளும் மனிதனுக்கு ஒப்பிட தகுந்த உயிர்களே. கருட புராணம், 3 வகையான உயிர்களை பற்றி குறிப்பிடுகிறது. "குட்டிகள் ஈன்பவை", "முட்டைகள் மூலம் உயிர்ப்பவை", "வியர்வைகள் மூலம் (அல்லது இறந்த பொருளின் மூலம்) ஜனிப்பவை" என்பவை அவை மூன்றும். இதில் கிருமிகள் மூன்றாம் வகையை சேர்ந்தவையாக கொள்ளலாம். எனவே தன் தகுதிக்கு (பாவ, புண்ணியங்களுக்கு) ஏற்ப, ஆத்மா தேர்ந்தெடுத்த ஜனனங்கள் தான் எல்லாம் என எடுத்து கொள்ளலாம்.

இந்த சிறிய ஆராய்ச்சி எனக்கு மட்டும் அல்ல, படிக்கும் உங்களிலும் ஏதாவது ஒரு சிறிய மாற்றத்தை உண்டு பண்ணி இருக்கலாம்!!!. "பணம்", "பதவி", "புகழ்", "பங்களா", "மது", "மாது" என ஏதோ ஒன்றை லட்சியமாக கொண்ட நம்மை, "மரணம்" தன் சாட்டையால் அடித்து "நிலையானதை நீ தேடவில்லை" என்று கூறுகிறது.

"மரணம்" – எல்லோருக்கும் உண்டு. ஏன், பிரம்ம பகவானே மரணத்தை உடையவன் என்று வேதங்கள் கூறுகின்றன. மரணத்திற்கு அடுத்து ஒரு வாழ்க்கை உண்டு என்று நம்பியாவது, தவறுகள் செய்வதை குறைப்போம். பிற உயிர்களுக்கும் முடிந்த வரை நன்மைகள் செய்து அதில் ஆத்மசுகம் காண்போம். (Atleast Try பண்ணுவோம் பாஸ்)…

SriKalahasthi

ஸ்ரீ காலஹஸ்தி – காலம் கடந்ததால் அஸ்தி

திருமலை திருப்பதி பற்றி தெரியாத இந்துவே இருக்க முடியாது. ஏன் இந்தியனே கூட இருக்க முடியாது. உலகிலேயே இரண்டாவதாக அதிக வசூல் ஆகும் புனிததலம். இந்த திருப்பதி பற்றி தெரிந்தவர்கள், கண்டிப்பாக "ஸ்ரீ காலஹஸ்தி" ஐ பற்றியும் தெரிந்து வைத்து இருப்பார்கள். திருப்பதியில் இருந்து சுமார் 36 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த புனிததலம், "தென்னகத்தின் கைலாயம்" என்றும் அழைக்க படுகிறது. ஏன் எனில், இந்த தலம், கைலாயத்திருக்கு ஒரு மாதிரி போலவே அமைந்து உள்ளதாக கூற படுகிறது. இந்த தலத்தின் அருகே அமைந்து உள்ள ஒரு குன்று, கைலாயத்தை குறிப்பதாகவும், அந்த குன்றில் இருந்து வடக்கு நோக்கி பாயும் ஸ்வர்ணமுகி என்ற சிறு ஆறு, கங்கைக்கு ஒப்பாகவும் கூறப்படுகிறது. இந்த கோவில் சுமார் ஐந்தாம் நூற்றாண்டில், கட்டப்பட்டதாகவும், 12 ம் நூற்றாண்டில் ராஜேந்திர சோழனால் புதுப்பிக்க பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் 5 நூற்றாண்டுகளுக்கு முன் ஸ்ரீ கிருஷ்ண தேவராயரால் புதுப்பிக்கபட்டது.

இத்தலம், "ஸ்ரீ காலஹஸ்தி" என பெயர் பெறுவதற்கு ஒரு காரணம் உள்ளது. "ஸ்ரீ" என்பது சிலந்தியை குறிக்கிறது. "கால" என்பது பாம்பினை குறிக்கிறது. மற்றும் "ஹஸ்தி" என்பது யானையை குறிக்கிறது. இந்த தலத்தில் "சிவ பெருமானின்" லிங்கத்திற்கு மேலாக கூடு கட்டி வாழ்ந்து வந்த ஒரு சிலந்தி, ஒரு நாள், காற்றில் சிதறி விழுந்த தீயை அணைப்பதற்காக , அதாவது லிங்க வடிவிலான சிவபெருமானை காப்பதற்காக, தன் வலைகளை இடை விடாது பின்னி, அதன் உயிரையே தீயிற்கு இரையாக்க முனைந்தது. அதன் பக்திக்கு மெச்சிய சிவ பெருமான், அந்த சிலந்திக்கு நேரடியாக காட்சி தந்து முக்தியும் அளித்ததாக ஒரு கதை உண்டு.

மேலும் இத்தலத்தில், ஒரு யானையும் பாம்பும் இடை விடாது, சிவ பெருமானிடம் பக்தி செய்து வந்தது. பாம்பு, அதற்கு கிடைக்கும் விலை உயர்ந்த பாசனங்கள், மணிகள், ரத்தினங்கள் ஆகியவற்றை கொண்டு கர்ப்ப கிரகத்தை அலங்கரித்து வந்தது. இதே போலவே, யானையும் தினமும் ஆற்றில் நீராடி, தன் தும்பிக்கை மூலம் சுத்தமான நீரினை கொண்டு வந்து சிவ பெருமானை குளிப்பாட்டியும் வந்தது. மேலும் அது தனக்கு மேலானவை என்று படும் இலைகளையும், மலர்களையும் கொண்டு வந்து சிவ பெருமானை அலங்கரித்து வந்தது. இந்த யானை, பாம்பின் அலங்கரிப்பை அகற்றி தன்னுடைய பணியினை செய்தும் வந்தவாறு இருந்தது. இதனால் கோபமுற்ற பாம்பு, ஒரு நாள் யானையிடம் நேரடியாக சண்டை செய்தது. பாம்பின் கொடிய விஷத்தினால் யானையும், யானையின் அசுர பலத்தினால் பாம்பும் இறந்து போனது. இவர்கள் தனக்கு தெரிந்த உன்னதமான முறையில் முழு பக்தியுடன் தன்னை வழிபட்டு வந்ததால் சிவபெருமான், இருவரையும் உயிர்ப்பித்து மோக்ஷத்தையும் வழங்கியதாக ஒரு கதை உண்டு. மனிதம் அல்லாத பிற உயிர்களும் பக்தி கொண்ட சிறப்பு காரணமாக, இத்தலம் இப்பெயர் கொண்டதாக கூறப்படுகிறது.

மேலும் இத்தலம் பல சிறப்புகளை தன்னகம் கொண்டுள்ளது.

  • 63 நாயன்மார்களில் ஒருவரான, "கண்ணப்பர்", தன் இரு கண்களையும், "கடவுள் குருடு ஆகி விட கூடாது" என்பதற்காக கடவுளுக்கு கொடுத்த தலம் என்ற பெருமை, இத்தலத்திற்கு உண்டு.
  • இந்த தலத்தில் "ராகு" மற்றும் "கேது" பகவானுக்கு என்று தனி சிலை வழிபாடு உண்டு. மேலும் ராகு மற்றும் கேது தோசங்களை களையும் தலம் என்றும் நம்பப்படுகிறது. "கால சர்ப்ப தோசம்" உடையவர்கள் நிவர்த்தி அடையும் தலமாகவும் கருதப்படுகிறது.
  • ஒருமுறை பார்வதி தேவி, தான் சிவ பெருமானிடம் பெற்ற சாபத்தினால் மனித பிறவி எடுத்து, அதை இந்த தலத்தில் உள்ள சிவ பெருமானை பூஜித்து, முன்பை விட பல மடங்கு சக்தியுடன் தேவ லோக உடலை அடைந்ததாக ஒரு கருத்து உண்டு. "பஞ்சாக்ஷரி மந்திரம்" என்னும் மந்திரங்களை பார்வதி தேவி உதிர்த்த தலமும் இதுவே. இந்த தலத்தில் "சிவ ஞானம்" அடைந்ததால் பார்வதி தேவி, "ஞான பிரசுன்னாம்பிகை தேவி" என்று போற்ற படுகிறார்.
  • இந்த தலம் பஞ்ச பூத தலங்களில் ஓன்று. பஞ்ச பூத தலங்களில் "வாயு" வை குறிக்கும் தலமாக இத்தலம் இருக்கிறது. மற்ற பஞ்ச பூத தலங்கலாவன:
    • நிலம் – ஏகாம்பரேஸ்வரர் கோவில் (காஞ்சிபுரம்)
    • ஆகாயம் – சிதம்பரம் கோவில்
    • நீர் – திருவானைக்காவல் கோவில்
    • நெருப்பு – திருவண்ணாமலை கோவில்
  • "மயூரா", "தேவேந்திரன்", மற்றும் "சந்திரன்" முதலிய தேவர்கள் இங்கே பாவ விமோச்சனம் அடைந்ததாக ஒரு வரலாறும் உண்டு.
  • "ஞான கலா" என்ற பூதம், இந்த தலத்தில் தான் 15 வருடம் பிரார்த்தனை செய்து தன் மனித உடலை திரும்ப பெற்றதாகவும் ஒரு கதை உண்டு.

இவ்வளவு சிறப்பு மிக்க "ஸ்ரீ காலஹஸ்தி" கோவிலின் ராஜ கோபுரம், மே 26 ம் தேதி இடிந்து தரை மட்டம் ஆனது. இதன் ராஜ கோபுரம் சுமார் 135 அடிகளை உயரமாக கொண்டது. சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட விரிசல்கள் பெரிதாகி, அவை கோவில் கோபுரமே முற்றிலுமாக தரை மட்டம் ஆகும் நிலைக்கு ஆளாகி இருக்கிறது. சரித்திர புகழ் வாய்ந்த இந்த புனித தலம், ஒரு மோசமான நிலையை தன் அனுபவத்தில் கண்டுள்ளது. "எவ்வளவு செலவு ஆனாலும், கோபுரம் மறுபடியும் பழைய நிலைக்கு சீரமைக்க படும்" என்ற அரசின் ஆறுதல் வார்த்தைகள் ஒரு புறம் இருக்க, கோவில் இடிந்து தரை மட்டம் ஆனது, என்னுள் அழுத்தமான ஒரு சோக பதிவை ஏற்படுத்தவே செய்து இருக்கிறது. நல்ல வேலையாக, முன் கூட்டியே எச்சரிக்கை விடுக்கபட்டதால், பெரும் உயிர் சேதம் தடுக்க பட்டு இருக்கிறது. எனினும் கோபுரத்தை தாய் வீடாக கொண்ட குரங்கு கூட்டங்கள் அடியோடு அழிபட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. அவையும் உயிர்கள் தானே!!!.

இந்த நிகழ்வு வெறும் வருத்தத்தை மட்டும் ஏற்படுத்தும் நிகழ்ச்சியாக நான் கருதவில்லை. இது மற்ற எல்லா கோவில்களின் கண்காணிப்புக்கும் இடப்பட்ட ஒரு எச்சரிக்கை. நம் இந்தியா, இவ்வாறான புராண சிறப்பு வாய்ந்த பல இடங்களை கொண்டு உள்ளது. அவற்றை நாம் கண்டிப்பாக போற்றி பாதுகாக்கவே வேண்டும். "ஆன்மிகம்" என்ற ஒரு அற்புதமான ஒரு உணர்வை நம்மில், "கோவில்", "மசூதி", "சர்ச்" மற்றும் எல்லா மதத்தின் கோவில்களுமே தான் வளர்த்து வருகின்றன. "கடவுள்", என்பவர் உண்மையா, பொய்யா என்ற சர்ச்சைக்கு அப்பாற்பட்டு, கோவில்கள் நம் புராதான சின்னங்கள் என்பதை யாராலும் மறுத்து விட முடியாது. நம் பெருமைகள், இவ்வாறான சின்னங்களை காப்பாற்றுவதிலும் அடங்கி உள்ளது.

கண்டிப்பாக அரசு, இனி நல்ல முறையில் நம் புனித தலங்களை காக்கும் என்ற நம்பிக்கை உடன் இந்த பதிவை நிறைவு செய்கிறேன்.

ஓம் நம சிவாய!…