Feeds:
Posts
Comments

Archive for June, 2012

Kavithai

ஆதித் தமிழன் எந்த ஒரு செயலையும் " எடுத்தோம், கவிழ்த்தோம் " என்று செய்ததில்லை, தான் செய்து வைத்து விட்டு சென்ற ஒவ்வொரு விடயத்திற்கு பின்னாலும், " அறிவியல், மருத்துவம், விஞ்ஞானம், என்ற எண்ணற்ற விடயங்கள் அதனுடன் விட்டுச் சென்றிருக்கிறான்.ஆனால் அதனுடன் சேர்த்து அவன் செய்துவிட்டு சென்ற மிகப்பெரிய தவறு, அந்த ஒவ்வொன்றிற்கும் பின்னால் " கடவுள் " பெயரை சொல்லிவிட்டு சென்றது தான்,ஒருவேளை அவன் கடவுள் பெயரை கூறினாலாவது பயந்து கொண்டு அந்த விடயங்களை கடைபிடிப்பார்கள் என்ற தொலை நோக்கு பார்வையாக கூட இருந்திருக்கலாம், ஆனால் பாவம் அவனுக்கு தெரியாது, வரும் சந்ததியினர், கவர்ச்சி நடிகைக்கெல்லாம் கோயில் எழுப்பி,தான் பெரிதாக நினைத்த கடவுளையே கூட இழிவு படுத்துவர் என்று.

இன்றைக்கு பகுத்தறிவு என்ற பெயரில், நம் முன்னோர்களின் பல அறிய கண்டுபிடுப்புகளை நாளுக்கு நாள் நாம் அழித்துக் கொண்டு வருகிறோம் என்று தான் கூற வேண்டும்,கோவிலுக்கு செல்ல கூடாது,சாமியும் இல்லை,பூதமும் இல்லை, என்ற வாதம் தான் இன்றைய பகுத்தறிவின் வெளிப்பாடாக இருக்கின்றது.அது உண்மையா,பொய்யா என்பது தனி நபர் விருப்பத்திற்கு உட்பட்டது.ஆனால் நாளடைவில் அந்த விடயம் பலரால்,பலவிதமாக திரித்து இன்று நம் அடையாளங்களை இழக்கும் நிலைக்கு வந்து விட்டோம் என்பதே உண்மை.

கடவுளின் பெயரை கூறி நடக்கும் மூட நம்பிக்கைகளை தடுத்து நிறுத்துவது தானே உண்மையான பகுத்தறிவு?உதாரணத்திற்கு பவுர்ணமி அன்று கிரிவலம் வந்தால் நல்லது, என்பதற்கு பின்னால் கடவுளின் பெயரை கூறியதால் இன்று நாத்திகர்கள் அதை செய்வது இல்லை, ஆனால் இதற்கு பின்னால் இருக்கும் அறிவியல், முழு நிலவு அன்று நிலாவிலிருந்து வரும் ஒளிக்கதிரில் உள்ள ஒருவித " பாசிடிவ் எனர்ஜி " நாம் சுற்றிவரும் மலையின் மீது பட்டு,நம் உடலில் இறங்கினால் நல்லது என அதையே தான் இன்று விஞ்ஜானம் கூறுகின்றது.

இன்றைக்கு இருப்பதை போன்று கேளிக்கைகளுக்கு திரை அரங்குகளோ,கல்வி கற்பதற்கு "ஏரிகளின்" மேல் கல்லூரிகளோ, மருத்துவமனைகளோ அவர்கள் கட்டிவைக்க வில்லை, இவை அனைத்தும் நடந்தது ஓரே இடத்தில், ஒரு இடத்திற்கு சென்றால் அனைத்தையும் கற்க முடியும் என்றால் ( களவி உட்பட ) அது அன்று கோவில்களாக மட்டுமே இருந்துள்ளது, அது ஒரு பல்கலைக்கழமாகவே இருந்துள்ளது , அதனால் தான் கோவில் சிற்பங்களில் களவி சம்மந்தப்பட்ட சிற்ப்பங்கள் கூட காண நேர்கின்றது," கோவில்களில் கேளிக்கைகளுக்கு நாட்டியங்கள் அரங்கேறியுள்ளது, கல்வி கற்க பாட சாலைகள் அமைக்கப்பட்டது.

சில கோவில்கள் மருத்துவமனைகளாகவும் செயல்பட்டுள்ளது ,உதாரணத்திற்கு திருச்சி, திருவைகுண்டத்தை கூட கூறலாம் அங்கே ஆயிரம் வருடங்களுக்கு முன்னே,வெறும் மூலிகைகளை வைத்து "……." சர்ஜரி வரை நடைபெற்றுள்ளது. இன்றைக்கு இருப்பதை போன்று அன்று அனைவரும் மாடி வீடுகளில் தங்கி இருக்க வாய்ப்பில்லை ஆக பெரு வெள்ளம் வரும் போது, பெரும் பாறைகளால், பெரும் உழைபிற்கு மத்தியில் உருவான இந்த கோயில்களில் மட்டுமே மக்கள் தஞ்சம் அடைந்திருக்க கூடும் , கோவில் தூண்களில் தான் நம் கலைகளை வளர்த்துள்ளோம், அங்கே ஒவ்வொரு சிற்பமும் சொல்லும் கதை தான், இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள்.ஆயிரம் வருடங்களுக்கு மேல் நம்முடம் பயணிக்கும் கோயில்கள் அமைந்திருக்கும் இடம் சாதாரமாக தேர்வு செய்து கட்டி இருக்க வாய்புகள் இருக்காது.அந்த இடமானது பூமத்திய ரேகை கோட்பாடுகளின் படி அறிவியல் அமைப்புகளுடன் மட்டுமே கட்டப்பட்டிருக்கும், இன்றைக்கு இருக்கும் நிலப் பதிவு அலுவலகம் அன்று கிடையாது,கோவில் கல்வெட்டுகள் முழுவதும் தான் அது பதியப்பட்டுள்ளது,அந்த கல்வெட்டுகளில் தான் தமிழனின் வரலாறு புதைந்துள்ளது.

தஞ்சை பெரிய கோயில் கட்டியது " ராஜ ராஜன் " என்று ஹார்ட் டிஸ்கிலோ, பென்ட்ரைவிலோ பதியப்படவில்லை, அனைத்தும் கோயில் கல்வெட்டுகள் மூலமே நமக்கு தெரிய வருகின்றது, அப்படி இருக்க பகுத்தறிவின் பெயரில் இப்பேற்பட்ட நம் வரலாற்று சின்னங்களை கொஞ்சம், கொஞ்சமாக அழிப்பது எந்த விதத்தில் நியாயம்? என்று யோசித்து பாருங்கள் ! வரலாற்று அடையாளங்கள் வேண்டாம் ,மொழி மட்டும் போதும் என்பவர்கள் ,மரங்கள் வேண்டாம் ஆக்சிஜன் மட்டும் போதும் என்று முரண்பாடான கருத்தை கூறுவதைப் போன்றது என்பதை உணரவேண்டும்.

ஐயாயிரம் வருடத்திற்கு முன்பே தமிழன் சித்த வைத்தியத்தில் கூறிய மஞ்சளுக்கு வெளிநாட்டுக்காரன் உரிமை வாங்கி வைத்துள்ளான்,வீட்டு முற்றத்தில் தமிழன் வளர்த்த வேப்பமரத்திற்கு வெளிநாட்டுக்காரன் உரிமை வாங்கி வைத்துள்ளான், இன்னும் எதை எல்லாம் தொலைக்கைப்போகிறோம் ? மொழி கலப்படமாகிவிட்டது, உடை மேற்கத்திய உடை, கலப்படம் இல்லாமல் பழமையுடன் காட்சியளிப்பதும், நாம் பழமையானவர்கள் என்று ஆதாரத்துடன் நிரூபிப்பதும்,இந்த கோயில்களை வைத்து மட்டுமே என்பதை நாம் எப்போது உணரப்போகிறோம்? அடுத்த தலைமுறைக்கு எதை விட்டுச்செல்லவிருக்கிறோம்?

தொலைத்தது வரை போதும், மீதம் உள்ளவயேனும் காப்பாற்றுவோம்.வரலாற்று சின்னங்களான நம் கோவில்களை காப்போம்.அந்த சிலைகளில் கூறப்பட்டுள்ள செய்திகளை உலகறிய செய்வோம் !தமிழை அடுத்த நிலைக்கு அழைத்துச் செல்வோம்.!!!
நன்றி: நண்பர் சசிதர

Advertisements

Read Full Post »

தீயில்புகுந்தால் சுடாமலும், தண்ணீரில் குளித்தால் குளிராமலும், இரண்டிலும் ஒரே நிலை தோன்றுவதே சமநிலையாகும். இந்த சமநிலையில் தன்னைத்தானே ஈடுபடுத்தி அமைதியாக வாழ்பவன், ஜீவாத்மா வடிவில் உள்ள பரமாத்மாவாகும்.

* சர்வ கலை ஞானத்தாலும், அனுபவ ஞானத்தாலும் மனநிம்மதி அடையப் பெற்றவனும், எதற்குமே ஈடுகொடுத்து ஐம்புலன்களையும் வென்றவனும், பொன், கல், மண் ஆகிய மூன்றையும் ஒன்றாக மதிப்பவனுமே யோகியருக்கெல்லாம் தலைசிறந்த யோகியாகிறான்.

* எந்தவிதமான பிரதிபலனும் எதிர்பாராமல் அன்பு கொண்டவர்கள், நண்பர்கள், தன்னை எப்போதும் அலட்சியப் படுத்துபவர்கள், நடுநிலையாளர்கள், தன்னையே வெறுப்பவர்கள், சுற்றத்தார், நல்லோர், தீயோர் எல்லாரிடமும் ஒரே நிலையில் நடந்து கொள்பவர்கள்தான் உத்தமமானவர்கள்.

* ஆசையே இல்லாதவன் யோகி. தன் சொத்து, சுகங்களை துறந்தவன் யோகி. பசித்திருந்து, தனித்திருந்து, விழித்திருந்து அதிலே இனிமை காண்பவன் யோகி. இத்தகையானது ஆத்மாவே யோகாத்மா ஆகிறது. இந்த நிலையை அடைய உன் மனப்புயலை அடக்க வேண்டும்.

* வயிறுமுட்ட சாப்பிடுகிறவனுக்கு யோகம் கிட்டாது. அதுபோல, எப்பொழுதும் உண்ணாமல் இருப்பவனுக்கும், கால நேரமின்றி தூங்குகிறவனுக்கும், விடிய, விடிய விழித்துக் கொண்டிருப்பவனுக்கும் யோகம் கிட்டுவதில்லை.

* சாப்பிடுவதிலும், நடமாடுவதிலும், தூங்குவதிலும், விழித்திருப்பதிலும் அளவாக இருப்பவன் துன்பம் இல்லாமல் இருப்பான்

Read Full Post »

மாதுளம் பழத்திற்கு மாதுளங்கம் என்ற பெயரும் உண்டு.
மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன.

இதில் இனிப்பு, புளிப்பு இரண்டு ரக மாதுளையும் சக்தியளிக்கும் பழத்தில் சிறந்தது. மாதுளையின் பழம், பூ, பட்டை, ஆகியவை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. மாதுளையின் பழங்களில் இரும்பு, சர்க்கரை சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் அனைத்து வகையான தாது உப்புக்களும், உயிர்ச் சத்துக்களும் அடங்கியுள்ளன. மாதுளம்பழத்தைச் சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்திஅதிகமாகிறது. உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிகத் துரிதமாகவும், அதிக அளவிலும் அழித்து விடுகிறது. அதனால் நோய் நீங்கி ஆரோக்கியமும் சக்தியும் அளிப்பதில் மாதுளை சிறந்த பலனைத் தருகிறது. இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது இருமலை நிறுத்துகிறது.

புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. ரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. பித்தநோய்களை நிவர்த்தி செய்கிறது. குடற்புண்களை ஆற்றுகிறது. பெப்டிக் அல்சர், டியோடினல் அல்சர், கேஸ்ட்ரிக் அல்சர் முதலிய எந்த வகையான அல்சரையும் குணமாக்குகிறது.

மாதுளம் விதைகளைச் சாப்பிட்டால் நீர்த்துப் போன சுக்கிலம் கெட்டிப்படுகிறது. மேக நோயின் பாதிப்பு ஏற்பட்டவர்கள் மாதுளை விதைகளைச் சாப்பிட்டால் பிரமேகம் பாதிப்பிலிருந்து நிவர்த்தியாகும். பிரமேக வியாதியால் ஏற்படும் இதய நோய்கள், இதய பலகீனம், நிவர்த்தியாகும்.இரத்தவிருத்தி ஏற்படும். சீதபேதிக்குச் சிறந்த நிவாரணம் அளிக்கிறது. தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடை கூடும். தொண்டை, மார்பகங்கள் நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது.ஆண்தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது.

மாதுளம் முத்துக்களில் சிறிதளவு …. மிளகுப் பொடியும் சேர்த்துச் சாப்பிட்டால் அனைத்து வகையான பித்தரோகமும் தீரும்.

மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும், அதிக தாகத்தைப் போக்கும். அடிக்கடி மயக்கம் உள்ளவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் நன்மை கிடைக்கும். மாதுளம்பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். சரீரம் குளிர்ச்சியடையும். காய்ச்சல் தணியும்.

மாதுளம் பழச்சாற்றை ஒரு பாத்திரத்தில் விட்டு சிறிது நேரம் வெயிலில் வைத்து எடுத்துச் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் பெருகும். பற்களும், எலும்புகளும் உறுதிப்படும். மாதுளம்பழத்தின் அனைத்து நன்மையையும் பெறலாம்.

மாதுளம்பழத்தின் மேல்புறம் ஒரு துவாரத்தைச் செய்து அதில் உள்ளுக்குச் சாப்பிடும் பாதாம் எண்ணெய் 15 மில்லிக்குக் குறையாமல் செலுத்தி எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து சூடு செய்தால் எண்ணெய் பூராவும் பழத்தில் கலந்துவிடும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட பழத்தைச் சாப்பிட்டால் கடுமையான இதய வலி நீங்கி விடும். நீடித்த இருமல் குணமாகும்.

பெரிய இனிப்பு மாதுளம் பழத்தில் ஆறு எடுத்து இதன் முத்துக்களை ஒரு பாத்திரத்தில் போட்டு 200 கிராம் சீனியை இதில் கலந்து வைத்து அரைமணி நேரம் வரை இருந்தால், முத்துக்களின் சாறு நீர்த்துப் பிரியும். இந்த சாறு அரைலிட்டர் சேர்ந்தால், ஒரு கிலோ சீனியை பாகுபதத்தில் காய்ச்சி, இதனுடன்மாதுளம் பழச்சாற்றைக் கலந்து வைத்துக் கொண்டு மீண்டும் பாகுபதம் வரை சூடு செய்து பத்திரப்படுத்திக் கொண்டு தினசரி 30 மில்லி அளவு எடுத்து, தண்ணீரில் கலந்து சாப்பிட்டு வந்தால், பித்தநோய்கள் நீங்கும். ஆயாசம் அகலும். வீரிய விருத்திக்கான டானிக் ஆகும். நினைவாற்றல் பெருகும்.

பொதுவாக மாதுளம்பழச்சாற்றுக்கு நான்கில் ஒரு பாகம் சீனி கலந்து சாப்பிட்டாலும் நல்ல பலன் கிடைக்கும்.

மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும்
சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும்
உண்டாகும். புதிய ரத்தம் உற்பத்தியாகி விடும். மாதுளம்பூக்களை மருந்தாகப் பயன்படுத்தும் போது, இரத்த வாந்தி, இரத்த மூலம் வயிற்றுக் கடுப்பு, உடல் சூடு தணியும். இரத்தம் சுத்தியடையும், இரத்த விருத்தி உண்டாகும். மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும். மூக்கில் இரத்தம் வடியும் நோய் உள்ளவர்கள், மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால், இரத்தம் கொட்டுதல் நின்று விடும். பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கிற்கு இதே மருந்தை மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் உதிரப்போக்கு நிவர்த்தியாகும். மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம் நீங்கும். மூலக் கடுப்பும், உடல் சூடும் தணியும். வாந்தி, மயக்கத்திற்குக் கொடுத்தால் நோய் தீரும். மாதுளம் பழத்தோலை உலர்த்தித் தூள் செய்து காலை, மாலை 15 மில்லி அளவில் சாப்பிட்டு வந்தால் வயிற்றுவலி, குடல் இரைச்சல், வயிற்றுப் பொருமல் தீரும்.

மாதுளம் மரப்பட்டை அல்லது வேர்ப்பட்டையை வெட்டி பச்சையாக இருக்கும்போதே இதன் எடைக்கு எட்டு மடங்கு தண்ணீர் சேர்த்து பாதியாகச் சுண்டக் காய்ச்சியதை, காலை நேரத்தில் 30 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ளதட்டைப் பூச்சிகள் மலத்துடன் வெளியேறி விடும்.

மலராத மாதுளம் மொட்டுக்களைக் காய வைத்து பொடித்துக் கொண்டு இதில்
சிறிதளவு ஏலம், கசகசாவையும் பொடித்துக் கலந்து 10 கிராம் அளவில் நெய்யில் குழைத்து காலை மாலை சாப்பிட்டு வந்தால் நீண்ட நாள் வயிற்றுப் போக்கும் சீத பேதியும் குணமாகும். உலர்த்திய மாதுளம் பூக்கள் 10 கிராமுக்கு மாதுளம் மரப்பட்டை 20 கிராம் சேர்த்துக் கொதிக்க வைத்து, சிறிது படிகாரத்தைக் கலந்து வாய் கொப்பளிக்க வேண்டும். கொப்பளிப்பது தொண்டை வரை செல்ல வேண்டும். இவ்வாறு கொப்பளித்தால் தொண்டைப்புண், தொண்டைவலி, வாய்ப்புண் குணமாகும். மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப்படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும்.

மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கட்டிக் கொண்டால் தலைவலி தீரும். வெப்பநோய் தீரும். மாதுளம் பூக்கள் அறுகம்புல், மிளகு, சீரகம் அதிமதுரம். சமமாகச் சேர்த்து கஷாயம் தயாரித்துக் கொண்டு, வேளைக்கு 30 மில்லி எடுத்து இதில் பசு வெண்ணெய் சேர்த்துக் கலக்கித் தொடர்ந்துசாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் ஏற்பட்ட விஷத்தன்மை நீங்கும். அலர்ஜியை நிவர்த்திக்கும் மூலச்சூடும் வெட்டை நோயும் நீர்க்கடுப்பும்

மாதுளம்பூச்சாறு 300 கிராம் சேகரித்து 200 கிராம் பசு நெய் சேர்த்து பூச்சாறு சுண்டும் அளவிற்கு காய்ச்சி நெய்யை வடித்து வைத்துக் கொண்டு தினசரி இரண்டு தேக்கரண்டி வீதம் காலை, மாலை சாப்பிட்டு வந்தால், இரண்டு மாதத்தில் கடுமையான சயரோகப்பாதிப்பு, படிப்படியாகக் குறைந்து விடும். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து உடல் தேறும். தொடர்ந்து இருபது தினங்கள் இதே நெய்யை காலை மாலை சாப்பிட்டு வந்தால் எல்லா விதமான மூலநோயும்

மாதுளம் விதை, வேர்ப்பட்டை, மரப்பட்டை இவற்றைச் சமமாக எடுத்து உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு, வேளைக்கு 5 கிராம் வீதம் சுடுதண்ணீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் பெண்களின் கர்ப்பாசய நோய்கள் அனைத்தும் நிவர்த்தியாகி பெண்களின் ஆரோக்கியம் நீடிக்குமாம்.

புளிப்புமாதுளம் பழத்தோல், சாதிக்காய் சமமாகச் சேர்த்து வினிகர் விட்டு நன்கு அரைத்து மிளகு அளவில் மாத்திரை செய்து உலர்த்தி வைத்துக் கொண்டு தினசரி 2_5 மாத்திரைகள் சாப்பிட்டுவந்தால் வயிற்றுப் புண்கள்

துவர்ப்பு மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து புண்களின் மீது போட்டு வந்தால் விரைவில் புண்கள் ஆறிவிடும். மாதுளம் மரப்பட்டையை கஷாயம் தயாரித்து வாய் கொப்பளித்தால் ஆடும் ‘பற்கள் கெட்டிப்படும். ஈறுகளின் நோய் தீரும். பற்களின் வலி குறையும். மாதுளை ஒரு பல்முனைநிவாரணியாகப் பயன்படுகிறது

Read Full Post »

சர்க்கரை நோயாளிகள் எல்லோரும் எந்தத் தயக்கமும் இன்றி அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளும் காய்கறி பாகற்காய்தான்.
எல்லோருக்கும் இது தெரிந்த விஷயமும் கூட. இதில் இயற்கையிலேயே இன்சுலின் நிறைந்துள்ளது. இது ரத்தம் மற்றும் சிறுநீரில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது.
அதிகாலையில் வெறும் வயிற்றில், மூன்று முதல் நான்கு பழத்தைச் சாறு பிழிந்து சாப்பிட்டு வர, நன்கு குணம் கிடைக்கும். இதன் விதைகளைப் பொடி செய்து சாப்பாட்டோடு கலந்தும் சாப்பிடலாம். பாகற்காய் பெரும்பாலும் உடலுக்கு நல்லது என்று எல்லோருக்கும் தெரியும்.
ஆனால் அதன் கசப்புச் சுவைக்காக பலர் அதனை விரும்புவதில்லை. அவ்வாறு இல்லாமல், அறுசுவைகளில் நமது உடலுக்கு நல்லதைத் தரும் இந்த கசப்புச் சுவையிலான பாகற்காயை வாரத்தில் ஒரு முறையாவது உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
பொதுவாக பாகற்காய் உடலுக்கு உஷ்ணத்தைக் கொடுக்கும். பாகற்காயில் இரண்டு வகைகள் உண்டு. பொடியாக இருக்கும் பாகற்காயை மிதி பாகற்காய் என்றும், நன்கு பெரிதாக நீளமாக இருப்பதை கொம்பு பாகற்காய் என்றும் அழைக்கிறார்கள்.
பாகற்காயை நாம் எப்படி வேண்டுமானாலும் சமைத்து சாப்பிடலாம். புளியுடன் சேர்த்து பாகற்காயை சமைப்பது சிறந்தது என்று சொல்லப்படுகிறது. நீரிழிவு வியாதி உள்ளவர்கள் பாகற்காய் சாப்பிட்டால் மிகவும் நல்லது. அவர்கள் மட்டுமல்லாமல் ஜூரம், இருமல், இரைப்பு, மூலம், வயிற்றில் பூச்சித் தொல்லை இருப்பவர்களும் பாகற்காயை உண்ணலாம். இந்த பிரச்சினைகள் இருப்பவர்கள் மட்டும்தான் பாகற்காய் சாப்பிட வேண்டும் என்ற அவசியமில்லை. இது போன்ற பிரச்சினைகள் வர வேண்டாம் என்றால் எல்லோருமே சாப்பிடலாம்.
பாகற்காய் நமது நாவிக்குத் தான் கசப்பே தவிர உடலுக்கு இனிப்பானது. பாகற்காயை விட பாகற்காயின் இலையில் அதிக மருத்துவக் குணங்கள் உள்ளன. அதன் சாறு பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. பாகற்காயின் இலைகளை அரைத்து உடல் முழுவதும் பத்துப்போட்டால் சிரங்கு ஒழிந்து விடும்.
இதேபோல பாகற்சாறும் உடலுக்கு மிகவும் ஏற்றது. ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு விதத்தில் பாகற்காய் இலையின் சாறைக் குடிக்க நோய் கட்டுப்படும்
நன்றி:இயற்கை மருத்துவம்

Read Full Post »

1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது

காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.

2.மிக அதிகமாகச் சாப்பிடுவது

இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.

3. புகை பிடித்தல்

மூளை சுருகவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.

4.நிறைய சர்க்கரை சாப்பிடுதல்

நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும்மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.

5. மாசு நிறைந்த காற்று

மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும்.

6.தூக்கமின்மை

நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.

7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது

தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.

8.நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது

உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.

9.மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது

மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.

10. பேசாமல் இருப்பது

அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.

Read Full Post »

தந்தை : நான் உன்னை அடிச்சுட்டா உன் கோபத்தை நீ எப்படி கண்ட்ரோல் பண்ணுவே?

மகன் : டூத் ப்ரஷினால டாய்லெட் சுத்தம் செய்வேன்.

தந்தை : அதனால எப்படி கோபம் கட்டுப்படும்!!!

மகன் : அந்த ப்ரஷ் உங்க ப்ரஷ் ஆச்சே. ஹி..ஹி.

Read Full Post »

உஷ்… உஷ் என்ற வெப்ப பெருமூச்சுகளின் ஒலி கேட்கத் துவங்கி விட்டது. இந்தக் கோடையை எப்படி சமாளிப்பது என்பதே, இப்போது எல்லாருக்கும் அனலாய் வீசும் கேள்வி…இதோ, கோடையை ஜில்லிடச் செய்யும் சில டிப்ஸ்…
* கோடைகாலத்தில், அதிகாலை, 5.00 மணிக்கு எழும் பழக்கத்தை மேற்கொள்வது நல்லது. வெயில் வரும் முன், சமையல், வீட்டு வேலைகளை முடித்து விடுங்கள்.
* முதலில், உடலை இறுக்காத பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். அந்த ஆடைகளின் வண்ணங்கள், மென்மை கலந்ததாக இருப்பது நல்லது. கறுப்பு, சிவப்பு மற்றும், “பளிச்’வண்ணங்கள், சூரிய ஒளியை உள் வாங்கும். இதனால், உடலின் நீர்ச்சத்து குறைந்து விடும். நீர் எரிச்சல், நீர்த்தாரை, நீர்க் கடுப்பு போன்ற நோய்கள் ஏற்படும்.
* அதிக நீர் அருந்த வேண்டும். இடைவெளி விட்டு நீர் அருந்தலாம்.
*வெயிலில் அலைந்து வந்தவுடன் நீர் அருந்தக் கூடாது. எவ்வளவு தாகம் இருந்தாலும், பத்து நிமிடம் கழித்து அருந்துவது நல்லது. அந்த நீர், குளிர்சாதனப் பெட்டியில் வைத்து எடுத்த நீராக இருக்கக் கூடாது. இந்த நீர் ஜலதோஷம், தலைவலி, உடல் வலியை ஏற்படுத்தும். மண் பானையில் வைத்த நீரை அருந்துவது நல்லது.
* குடிநீரில், சீரகம் கலந்து கொதிக்க வைத்து, ஆறியபின், அருந்தலாம்.
* கோடையின் வெப்பத்தை குறைக்க, மோரே அருமருந்தாகும். மதிய வேளையில், மோரில் நீர் கலந்து, அதனுடன் சீரகம், கொத்தமல்லி சேர்த்து குடிக்கலாம்.
* கோடை காலத்தில், டிபன் அதாவது தோசை, பூரி, பரோட்டா இவற்றை தவிர்ப்பது நல்லது. காலையில் இட்லியும், கேழ்வரகு, கம்பு இவற்றை கஞ்சியாக செய்தும் சாப்பிடலாம். இதனால்,உண்ட உணவு எளிதில் ஜீரணமாகும்.
* மதிய உணவில் அதிகக் காரம், புளி சேர்க்காமல், நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்.
* பறங்கிக்காய், பூசணிக்காய், சுரைக்காய், வெள்ளரிக்காய் அதிகம் சேர்த்துக் கொள்ளவும்.
* தினமும் இருமுறை குளிப்பது நல்லது. அதிக வியர்வை இருக்கும் போதும், வெயிலில் இருந்து திரும்பிய உடனும் குளிக்கக் கூடாது.
* மதிய வெயிலில் அலைவதை தவிர்க்கவும். முடிந்தவரை, பகலில் நீண்ட தூரப் பயணத்தைத் தவிர்ப்பது நல்லது.
* வெயில் தாக்காமலிருக்க, தலையில் தொப்பி அணிந்து செல்லலாம். வெளியில் செல்லும் போது, முகம், கை, கால்களில் லேசாக எண்ணெய் தேய்த்து கொண்டால், சருமம் வறட்சியடையாமல் இருக்கும்.
* வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம்.
* கோடை வெப்பத்தில், அதிக நேரம் குளிரூட்டப் பட்ட,”ஏசி’ அறையில் இருப்பது நல்லதல்ல. அதுபோல், அலைந்து திரிந்து வியர்வையுடன் குளிரூட்டப்பட்ட அறைக்குள் செல்வதும் நல்லதல்ல.
* சர்க்கரை நோயாளிகள், கோடை காலத்தில், அதிகம் வெயிலில் அலைவதைத் தவிர்க்க வேண்டும். உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
* படுக்கையறை நன்கு காற்றோட்டமாக இருக்க வேண்டும். பருத்தியினால் தயாரிக்கப்பட்ட விரிப்புகளை பயன்படுத்தலாம்.
* வெளியே செல்லும் போது, கறுப்பு வண்ண குடைகளை பயன்படுத்துவது நல்லது.

Read Full Post »

Older Posts »